திருத்துறைப்பூண்டி, டிசம்பர் 6 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோவில் கீழத்தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் சந்தோஷ் என்கிற சந்தோஷ் குமார் (24) மற்றும் திருத்துறைப்பூண்டி
கழுவமுள்ளி தெரு முருகேசன் மகன் தீபன் ராஜ் (25) ஆகிய இருவரும் நேற்று மதியம் பள்ளங்கோவில் கீழத்தெரு சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கண்ட இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு 32 ஆயிரம் ஆகும். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


