தென்தாமரைகுளம், நவ. 25 –
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள உள்ளாட்சி மன்றங்களிலும் மாற்றுத்திறனாளி மக்களின் பங்களிப்பு இருக்கும் பொருட்டு நகர்புற உள்ளாட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர்கள் நியமனம் செய்வது தொடர்பாக, அரசாணைகள் வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து தென்தாமரை குளம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு அதன் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று மதியம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு கலந்து கொண்டு வாழ்த்திபேசினார்.அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள குமாரப்பெருமாள் விளையை சேர்ந்த ஜாண் பிலிப் ராஜதேவ் க்கு பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுப்பிரமணியன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து நியமன ஆணையை வழங்கினார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் கான்ஸ்டன் டைன், ஆல்வின் ஜெபசிங், வீனஸ் அலுமினியம் நிறுவன உரிமையாளர் அலெக்ஸ், திமுக நிர்வாகிகள் தாமரை பிரதாப், செல்வன், பொன் ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்



