இராமேஸ்வரம், நவ. 25 –
ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்தும் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு ஆரோக்கிய நிர்மலா தலைமை தாங்கினார். கண்டன உரை வில்லியம் ஜாய்சி, மாரிக்குமா, கலைச்செல்வன், அஞ்சனா, தாலுகா தலைவர்
முத்து மாரியம்மாள் மாதர் சங்க துனைத்தலைவர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் இந்திய மாணவர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிப சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



