களியக்காவிளை, நவ. 24 –
களியக்காவிளை அருகே கோழிவிளையில் காரில் கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குமரி மாவட்ட எல்லை கோழி விளை சந்திப்பில் ஒரு கார் கேட்பாரற்று நின்றது. இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று காரினை ஆய்வு செய்தனர். காரில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது ஆய்வில் தெரிய வந்தது. காரை பறிமுதல் செய்த போலீசார்அரிசியினை சாப்பிக்காடு குடோனில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


