தேனி, நவ. 20 –
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கொடைநாடு கொலை, கொள்ளை குறித்த வழக்கு விசாரணை என்னாச்சு என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் குறிப்பாக முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பெரியகுளம் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த போஸ்டரில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா உள்ளிட்டோர்களின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதோடு எடப்பாடி பழனிச்சாமியின் கார்ட்டூன் படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



