குளச்சல், நவ. 17 –
குளச்சல் அருகே கொட்டில்பாடு குழந்தை யேசு காலனியை சேர்ந்தவர் மரிய ஆரோக்கியம் மனைவி குளோரி (54). இந்த தம்பதிக்கு மரிய டைனிஷ் (36) என்ற மகன் உள்ளார். மரிய ஆரோக்கியம் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அங்கு குளோரி உதவியாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் மரிய டைனிஷ் தனது தாய் குளோரியிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி வந்துள்ளார்.
நேற்று குளோரி வீட்டிலிருந்த போது வீட்டுக்கு மரிய டைனிஷ், அதே பகுதியைச் சேர்ந்த பெல்லார்மின் ( 45) மற்றும் கண்டால் தெரியும் நபர் ஆகியோர் அங்கு வந்தனர். அங்கு மரிய டைனிஷ் மீண்டும் பணம் தருமாறு தாயிடம் கேட்டு தகராறு ஈடுபட்டார். குளோரி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரிய டைனிஷ், பெல்லார்மின் மற்றும் ஒருவர் சேர்ந்து குளோரியை தாக்கினர்.
காயமடைந்த குளோரி குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் மகன் மரிய டைனிஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


