இராமநாதபுரம், நவ. 14 –
உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தில் உள்ள முக்கிய நபர்கள் தமிழகத்தில் போதை பொருள் விற்பனை செய்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் ராமநாதபுரத்தில் பேச்சு.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ யாத்திரை ராமநாதபுரம் வந்தடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நயினார் நாகேந்திரன் அரண்மனையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசியவர்: கச்சத்தீவை இலங்கைக்கு திமுக தாரைவார்த்து ராமநாதபுரத்தில் முதுகு எலும்பாக உள்ள மீனவர்களுக்கு துரோகம் செய்தவர் கலைஞர். கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு அப்படி ஒன்றுமே தெரியாமல் நடித்தவர் கலைஞர் கருணாநிதி.
மகளிர் உரிமை தொகை தேர்தல் நேரத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. சமீபத்தில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
குவைத்தில் இருந்த மீனவரை மீட்டு அவரது குடும்பத்திற்கு 3.75 லட்சம் இழப்பீடு பெற்று கொண்டது பாஜக அரசு. ஆனால் திமுக முதல்வர் வெளிநாட்டில் உள்ளவர்களை தானே சென்று மீட்டதாக நாடகமாடுவார். தமிழகத்தில் உதயநிதி நற்பணி மன்றத்தை சேர்ந்தவர்கள் பலரும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரிப்பால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது முதல்வர் இதற்கு பொறுப்பேற்க மாட்டார்.
கரூர் தவெக விஜய் கூட்டத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பேசியதுடன் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாரால் நடந்தது என்பது எல்லாருக்கும் தெரியும், அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லை என்பது தான் உண்மை. ஆனால் முதல்வர் அதனை ஏற்க மறுக்கிறார்.
கள்ளசாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, விவசாயிகள் உயிரிழந்தால் வெறும் 3 லட்சம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மக்களை ஏமாற்றிய திமுக கட்சியை வரும் தேர்தலில் புறகணித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டு கொண்டார்.



