நாகர்கோவில், நவம்பர் 13 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் முறையே வரும் 15-ம் தேதி (சனிக்கிழமை), 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தாள் 1ல் 1835 தேர்வர்களும், தாள் 2ல் 12,736 தேர்வுகளும் தேர்வு எழுத உள்ளனர். மேலும் தாள் 1ல் இரண்டு ஸ்க்ரைப் மற்றும் தாள் 2ல் 26 ஸ்க்ரைப் தேர்வுகளும் தேர்வு எழுத உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் டெட் தாள் 1 தேர்வு, 07 தேர்வு மையங்களிலும், டெட் தாள் 2 தேர்வு 43 தேர்வு மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வர்கள் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நுழைவுச்சீட்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களை தேர்வுக்கு முந்தைய நாளே பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம் என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் தேர்வு எழுதும் தேர்வுகளுக்கு ஏதேனும் தேர்வு சார்ந்த சந்தேகங்கள் இருந்தால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப்பள்ளி) ஷ்யூஸ் (அலைபேசி எண் 9600983267) மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) முருகன் (அலைபேசி எண் 7598512933) ஆகியோரை தொடர்பு கொண்டு உரிய தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம் இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


