By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை

Last updated: November 11, 2025 5:10 pm
November 11, 2025
25 Views
Share
SHARE

சுசீந்திரம், நவ. 11 –

நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரன்விளை அனந்தனார் கால்வாயில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கால்வாயில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்தவரின் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினார்கள். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பிணமாக கிடந்தவர் வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (31) என்பது தெரியவந்தது.
வினோத்குமார் பிணமாக கிடந்தது குறித்து தகவல் தெரிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வினோத்குமார் கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் கால்வாயில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. வினோத் குமாரின் உடலில் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் யாரோ வினோத்குமாரை கொலை செய்து கால்வாயில் வீசி விட்டதாக கூறி உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 8ம் தேதி மாலை என்.ஜி.ஓ.காலனி பகுதியில் உள்ள மதுபான கடையில் வினோத்குமாருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வினோத்குமாரின் அண்ணன் மணிகண்டன் (37) சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: இறந்து போன வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், வினோத்குமாரின் அப்பா, அம்மா இறந்து விட்டதாகவும் அதனால் வினோத்குமாரை மணிகண்டன் கவனித்து வந்ததாகவும், உறவினர்கள் காலை 6:30 மணிக்கு முன்பு ஏதோ சமயத்தில் வல்லன்குமாரன்விளையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வினோத்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான் வினோத் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது
நாகர்கோவில்: வீட்டு வளர்ப்பு நாய் கடித்து சிறுமி படுகாயம்; போலீஸ் வழக்கு பதிவு
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
பர்னிச்சர் ஷோரூம் ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி

June 20, 2024
171 Views
அகஸ்தீஸ்வரம் ஒன்றியதில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
பர்கூர் பேருந்து நிலையத்தில் மன்டரப்பள்ளி ஊராட்சி மன்றம் சார்பில் நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவை பொது மக்களுக்கு வழங்கினார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைப்பு!!கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவு!!
பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தில்பஜாஜ் பல்சர் NS400 பைக் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account