சுசீந்திரம், நவ. 6 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை சுவிசேஷபுரத்தைச் சார்ந்தவர் பிரைட் இன்ப ஜோஷ் (51). இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்தவர் இரண்டு வருட காலமாக வீட்டிற்கு செல்லாமல் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கலை அரங்கத்தில் தங்கியும் டெம்போ டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் கலையரங்கு கட்டண கழிப்பிடம் அருகே இறந்து கிடப்பதாக அவரது மகன் வேத சரணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் வேதசரண் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


