சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குவளைவேலி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார். இதனை காண குவளைவேலி கிராம பொதுமக்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏறாளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



