மார்த்தாண்டம், அக். 22 –
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி விளவங்கோடு வட்டம், ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ சமூக நலக்கூட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதேயாகும்.
அதனடிப்படையில் விளவங்கோடு வட்டம் நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 7,8 மற்றும் 12 முதல் 18 வரையிலான வார்டு பகுதி பொதுமக்களுக்கு ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ சமூக நலக்கூட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களை அவர்களின் கோரிக்கைக்கு தொடர்புடைய துறைகள் உள்ள அரங்குக்கு அழைத்துச் சென்று முறையாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றதா என்றும், பெறப்படும் மனுக்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



