திண்டுக்கல், அக்டோபர் 15 –
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமானது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் T.பாக்கியம் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் S. வாலண்டினா, மாவட்ட செயலாளர் V. பாப்பாத்தி, மாவட்ட துணை தலைவர் G. கௌரி, மாவட்ட துணை செயலாளர் L. பாண்டியம்மாள், S. மாவட்டத் துணை செயலாளர் S. சோபா திலகம் போன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2005-ன் படி 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிடவும், நகர்ப்புற பேரூராட்சிகளில் விரிவுபடுத்தவும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி தினக்கூலியாக 600 ரூபாய் வழங்கவும், மலைப்பகுதிகளில் சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கவும் மற்றும் இதுபோன்ற பத்து கோரிக்கைகளுக்கும் மேலாக முன் வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



