நாகர்கோவில், அக். 9 –
அக்டோபர்-09ம் தேதி உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு அஞ்சல் விழிப்புணர்வு பேரணி “ஒவ்வொரு வீட்டையும் இணைத்து, ஒவ்வொரு கனவையும் வலுப்படுத்துதல்” என்னும் கருப்பொருளில் இல்லம்தோறும் அஞ்சல் துறையின் சேவையை கொண்டு சேர்க்கும் வகையில் அஞ்சல் ஊழியர்கள் சார்பாக நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் இருந்து காலை குமரி மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் தலைமை அஞ்சலக அதிகாரி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் மரம் நடு விழாவும் இதன் ஒருபகுதியாக நடைபெற்றது.



