சங்கரன்கோவில், அக். 07 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக வைசிய சங்க பள்ளி, 36 கிராம சேனை தலைவர் பள்ளி, வணிக வைசிய சங்க பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு 750 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டி புத்தகங்களை வழங்கினார்.
தொடர்ந்து ராஜா எம்எல்ஏ பேசுகையில்: இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் மாணவ, மாணவிகளின் கல்வியில் மிகுந்த அக்கறைகள் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார். இன்று இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கல்விக்கென உருவாக்கப்பட்ட திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென பேசினார்.
தேர்வுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், இளைஞரணி கார்த்தி தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் சிவசங்கரநாராயணன், வார்டு செயலாளர்கள் வீராச்சாமி, பழனிச்சாமி , மாணவரணி வெங்கடேஷ், ஜெயக்குமார் பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



