By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்

Last updated: October 4, 2025 8:29 pm
October 4, 2025
40 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக்டோபர் 04 –

புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் அடுத்த விஷயம், புரட்டாசி சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு தான். இந்த நாளில் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகையிட்டு வழிபடுவது பலரது வழக்கம். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புக்குரியதாகும். இருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிக மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபடலாம்.

இதனால் பெருமாளின் அருள் கிடைப்பதுடன், சனி பகவானால் ஏற்படும் தீய பலன்கள் குறைந்து அவரின் அருளும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில், குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் எவர் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை வழிபடுகிறாரோ அவரை சனி பகவான் துன்புறுத்துவது கிடையாது. மாறாக அவர்களுக்கு நன்மைகளை மட்டும் வழங்குவதாக திருப்பதி ஏழுமலையானிடம் சனி பகவான் வாக்குறுதி அளித்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவற்றில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நவராத்திரி பண்டிகை வருவது இன்னும் கூடுதல் சிறப்பானதாகும். இத்தகைய மகத்துவம் வாய்ந்த புரட்டாசியில் இந்த ஆண்டு நான்கு சனிக்கிழமைகள் வருகின்றன.

இதில் நடுசனியான இன்று மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று கிருஷ்ணகிரியில் நெடு சனியை முன்னிட்டு கிருஷ்ணகிரியை அடுத்த கணவாய்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயிலில் அருகே, தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் ஆர் சண்முகம் தலைமையில் சுமார் 5000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

மாவட்ட கழக பொருளாளர் வி.லட்சுமணன் முன்னிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.முருகன் வரவேற்புரையில், மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். கிட்டம்பட்டி ஊர் சின்னகவுண்டர் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.சி.கனக்கன், காம்ப்ளக்ஸ் (எ) திம்மராயன், ரவி, பச்சையப்பன், ஆர்.பி.சிக்கன் வி.பெருமாள், மீனாட்சி மஹால் பெட்டிக்கடை ஜலா, ஆர்.ராஜேந்திரன், கோவிந்தசாமி, கோவிந்தன், கருத்தப்பன், குமார், ராமன், பெரியசாமி, லட்சுமணன், உள்ளிட்ட கழக கண்மணிகள் ஏற்பாட்டின் பேரில் இந்த அன்னதானம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
அரசு மாங்கனி கண்காட்சியை, தனியாருக்கு சொந்தமான திடலில்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி: வால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்

February 21, 2025
41 Views
திருப்புவனம் அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி மலையோர பகுதிகளில் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
கொச்சி கலாச்சார மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account