கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிகளில் உள்ள புளியம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, புளியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, சுண்டகாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி, வடமலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி, கெங்கிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, மைலம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள 60 ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 5 ஆசிரியர் தினமான இன்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தார். முன்னதாக புளியம்பட்டி ஊராட்சி செயலகத்திலிருந்து ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து புளியம்பட்டி கிராமத்தின் வழியாக ஊர்வலமாக மேள தாளங்களுடன் அழைத்து சென்று, அரசு மேல் நிலைப்பள்ளி வந்தடைந்தனர். பள்ளி வளாகம் முன்பு ஆசிரியர்களுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டு, நினைவு பரிசுகளை வழங்கினார். அப்போது ஹேப்பி டீச்சர்ஸ் டே என அனைத்து மாணவர்களும் கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தனர். பின்னர் கல்வியின் சிறப்பு குறித்தும், சமூக அக்கறை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும் ஊக்கமளிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் பேசினார். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், புளியம்பட்டி ஊர் கவுண்டர் மணி, எஸ்,எம்.சி. குழு தலைவவி சுவிதா மற்றும் குழு உறுபினர்கள் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் தினத்தன்று மரியாதை செய்தது சுற்று வட்டார பகுதிகளில் பேசு பொருளாக மாரியுள்ளது. ,



