தஞ்சாவூர், அக்டோபர் 4 –
தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப் பு பொறியாளர் அலுவலகத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் – திருச்சி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவல கம் அருகே ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப் பு பொறியாளர்கள் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு எம்பிக்கள் கல்யாண சுந்தரம், முரசொலி, நெடுஞ்சாலை துறை சென்னை தலைமை பொறியாளர் சத்ய பிரகாஷ், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையின் பணிகளை சிறப்பாக செயல்படுத்திடும் நோக்கில் டெல்டா மாவட்ட மக்களின் 40 ஆண்டு கோரிக்கையான டெல்டா மாவட்டங்களுக்கென ஒரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் கீழ் 5 கட்டு மான மற்றும் பராமரிப்பு கோட்ட ங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சாலை மற்றும் பாலங்களை கட்டுமானம் செய்யவும், பராமரிப்பு செய்யவும், பணிகளை தேர்வு செய்வதில் இருந்து முடிவு சான்றிதழ் வழங்குவது வரையிலான அனைத்து துறை நடைமுறைகளையும் இந்த அலுவலகம் செயல்படுத்தும்.
மேலும் 1,105 கிலோமீட்டர் மாநில சாலைகள், 1057 மாவட்ட முக்கிய சாலைகள், 3524 கிலோ மீட்டர் மாவட்ட இதர சாலைகள் என மொத்தம் 5686 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



