திண்டுக்கல், அக். 4 –
திண்டுக்கல் மாவட்டம், எரியோடுஅருகே உள்ள குதுப்பனம்பட்டியில் ஸ்டார் புரமோட்டர்ஸ் சார்பாக ஸ்டார் கிரீன் அவென்யூ வீட்டு மனைப்பிரிவுகள் திறப்பு விழா மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி ஸ்டார் கிரீன் அவென்யூ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் உதயம் லயன்ஸ் சங்கத்தின் பட்டைய தலைவர் எம்ஜெஎஃப். லயன் பொறியாளர் நல் நாகராஜன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் உதயம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எ. வர்க்கீஸ், மதுரை பொறியாளர் சக்சஸ் சி. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் எமஜெஎஃப்.லயன். ஆர்.கே. தங்கராஜ் கலந்து கொண்டு ஸ்டார் கிரீன் அவென்யூ வீட்டு மனைப்பிரிவுகள் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து திண்டுக்கல் ஜி.டி.என் கல்விக் குழுமம் மற்றும் தரணி குழுமம் சேர்மன் எம்ஜெஎஃப்.லயன்.டாக்டர் கே. ரெத்தினம் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சங்களான 40 அடி, 33 அடி, 30 அடி மூன்று வகையான தரமான தார் சாலைகள், சாலைகளின் இருபுறமும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் கிரீன் அவென்யூ முழுவதும் சோலார் மின் வழக்குகள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வளாகத்தை சுற்றி 6 அடி உயரம் உள்ள சுற்றுச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தரமான பொது பூங்கா பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டது. விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், செடிகள், முதியோருக்கான இருக்கைகள், சோலார் மின்விளக்குகள், தண்ணீர் வசதி ஆகியவை முறையாக செய்யப்பட்டுள்ளது. அனைத்து மரங்களுக்கும் தேவையான தண்ணீர் சொட்டு நீர் பாசனம் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயர் அழுத்த மின் இணைப்பு வசதி 24 நேரம் போக்குவரத்து வசதி குறைந்த ஆழத்தில் சுவையான நிலத்தடி நீர், செம்மண் பூமி உள்ளது. இயற்கையான காற்றோட்டமான முறையில் மனைகள் அமைந்துள்ளது.
மேலும் மனைகளை சுற்றி 10 அடி உயரமுள்ள உயர்தரமான வாகை, புங்கை, நெட்லிங், சரக்கொன்றை, கடம்பம், மந்தாரை, மகிழம் பூமருது, யானை பிடுங்கி, தெரிமினாலியா, கோல்டன், பாட்டில் பிரஸ், சில்வர் ஓக் உட்பட ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் மரக்கன்றுகளை நடப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் பி. கிருஷ்ணன், டாக்டர் டி.ஆர். குமரேஷ், டாக்டர் ஆர். அறவாழி, கே. கணேஷ், பொறியாளர் டி.எஸ். ராம்குமார், ஏடி. ரூபன் விக்டர், எம்.எஸ். மணி, கே. சீனிவாசன், வி. சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியை லயன்.நல் கவிராஜன், முதல் உதவி தலைவர் லயன்.எம்ஜெஎஃப். பி. பாலசுப்பிரமணி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.



