திண்டுக்கல் அஞ்சுக்குழிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இசபெல்லா , தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர். சே. அலெக்ஸ் ஐசக் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளம் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரகதோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின்கீழ் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம், மழை நீர் சேகரிப்பு வழி முறைகள் மற்றும் தண்ணீர் சிக்கனத்தின் தேவை போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.



