வேடசந்தூர், அக். 04 –
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்திராஜன் முகாமில் வழங்கப்படும் முக்கிய சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள், முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, ஆதார் அட்டை திருத்தம் மற்றும் புதிய பதிவு, ரேஷன் கார்டு திருத்தம் மற்றும் புதிய விண்ணப்பம் பிறப்பு / இறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்கள் என மொத்தமாக 46 வகையான அரசு சேவைகளை, பொதுமக்கள் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுல்தான், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற செயலர் மற்றும் துறை சார்ந்த சிறப்பு அரசு அதிகாரிகள், ஒன்றிய மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.



