விளாத்திகுளம், அக்டோபர் 01 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எப்போதும் வென்றான் கிராமத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி ஏற்பாட்டில் பூத் பாகம் வார்டு கழக நிர்வாகிகள் ஆன்லைனில் நேரில் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில்: கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும், கடந்த நான்காண்டு திமுக செய்த ஊழல்கள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தாங்கள் அனைவரும் முழு வீச்சில் செயல்பட்டு அதிமுகவிற்கு வெற்றியை பெற்றுத் தந்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், தனஞ்செயன், தனவதி, எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை கவியரசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



