தஞ்சாவூர், செப்டம்பர் 25 –
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா தஞ்சாவூர் சங்கீத மஹால் தர்பாரில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்பி, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ பங்கேற்றனர். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் மன்னர் சரபோஜியின் சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ச. முரசொலி எம்.பி, துரை.சந்திர சேகரன் எம் எல் ஏ முன்னிலை வகித்து மன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் சங்கீத மஹாலில் நடந்த விழாவில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் 9 புதிய நூல்களையும் 7 மறுபதிப்பு நூல்களையும் வெளியிட அந்த புத்தகங்களை ச. முரசொலி எம்பி, துரை சந்திரசேகரன் எம் எல் ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: மன்னர் சரபோஜியின் பிறந்த நாளை கொண்டாடுவது அவர் சிறப்பான பணிகளுக்காக நாம் செலுத்துகின்ற மரியாதையாகும். காலத்தால் அழிக்க முடியாத ஓலைச்சுவடிகளையும், பழமை வாய்ந்த வரலாற்று நூல்களையும், பாதுகாத்து வளரும் தலைமுறைக்கும், மக்களுக்கும் பழைய வரலாற்று பண்பாடு, கலை, கலாச்சாரம் இவற்றை தொடர்ந்து போற்றக்கூடிய உணர்வுகளை பாதுகாத்து வளரும் தலைமுறைக்கும் மக்களுக்கும் பழைய வரலாறுகளையும் பண்பாடு கலை, கலாச்சாரம் இவற்றை தொடர்ந்து போற்றக் கூடிய உணர்வுகளை சரஸ்வதி நூலகம் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. எனவே பெருமை வாய்ந்த மன்னர் சரபோஜியை என்றென்றும் போற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சரஸ்வதி மகால் நூலக ஆயுள் உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே, அரண்மனை தேவஸ் தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே, துணை கலெக்டர் (பயிற்சி) சங்கரன் நாராயணன், சரஸ்வதி மஹால் நூலகர் மற்றும் நூலக பணியாளர்கள் நிர்வாக அலுவலர் ஆனந்த கணேசன், தாசில்தார் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், நூலகர் நிலை 2 சுதர்ஷன், சரஸ்வதி மஹால் நூலக தமிழ் பண்டிதர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



