சங்கரன்கோவில், செப். 24 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வீமராஜ் ஏற்பாட்டில் நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகி தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட துணைச் செயலாளர் ராமச்சந்திரன் என்ற கோபி மற்றும் தவெகவை சேர்ந்த பூதத்தான், ஶ்ரீ ராம்நாத்ஜோதி, கணேசன், பரமசிவன், அசோக் மனோஜ், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தாமோதரன், அர்ஜுன், முகேஷ் அமமுகவை சேர்ந்த பரமசிவன் ஆகியோரும் திமுகவில் இணைந்துள்ளனர்
புதிதாக திமுகவில் இணைந்தவர்களை வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தீவிர களப்பணி ஆற்ற வேண்டுமென மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கேட்டுக்
கொண்டார். இந்த நிகழ்வின் போது நகராட்சி நகர் மன்றத் தலைவர் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மின்வாரிய தொமுச திட்ட செயலாளர் மகாராஜன், மாணவரணி வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சிவசுப்பிரமணியன் மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, ஜான்சன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



