By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை பூட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை பூட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
தென்காசி

தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை பூட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

Last updated: September 24, 2025 10:25 am
September 24, 2025
27 Views
Share
SHARE

கடையநல்லூர், செப். 24 –

கடையநல்லூர் அருகே தாய்க்கு உணவு தராமல் வீட்டை பூட்டி சென்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமம் செந்தில் ஆண்டவர் தெருவில் வசித்து வந்தவர் கோர்ட்ரா தேவர். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகிய நிலையில் கோர்ட்ராத்தேவர் தனக்கும் தனது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் உணவு மற்றும் புகலிடம் தந்து பாதுகாக்க வேண்டும் என கூறி தனது இளைய மகன் சந்தன பாண்டி என்பவருக்கு தன்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீடுகளை ஏற்பாடு ஆவணமாக எழுதி பத்திரப்பதிவு செய்தார். இந்த ஏற்பாடு ஆவணம் தனது மனைவி சொர்ணத்திற்கு தெரியாமலே ரகசியமாக நடந்தேறியது.

இந்நிலையில் கடந்த வாரம் சொர்ணம் குடியிருக்கும் வீட்டை விட்டு சொர்ணத்தை வெளியேற்றியதுடன் கதவை பூட்டி போட்டு விட்டு அவருக்கு உணவு கொடுக்காமல் சந்தன பாண்டியன் அவரது மனைவியும் கேரள மாநிலத்திற்கு சென்று விட்டனர். இந்நிலையில் செய்வதறியாத சொர்ணம் தனது உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்து நிலைமையை எடுத்துக் கூறி அழுதுள்ளார். பின் இது குறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட முயன்றும் புகாரை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் நாங்கள் விசாரிக்க எந்தவித சட்டத்தில் இடமும் இல்லை எனக் கூறி புகாரை வாங்க மறுத்து விட்டனர்.

இதன் பின் சில காவல் அதிகாரிகள் சொர்ணத்தின் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் செய்யுங்கள், அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறவே உறவினர்களின் உதவியோடு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரை வாராந்திர மனுநீதி நாள் முகாமில் நேரடியாக தனது புகார் மனுவை கொடுத்து அழுது புலம்பினார். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் இது சம்பந்தமாக சந்தன பாண்டி மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சொக்கம்பட்டி காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மனு மீது இந்திய சட்ட பிரிவுகள் மூலம் அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் இந்த மனு சம்பந்தமாக காவல் அதிகாரிகள் சந்தன பாண்டியை கைபேசியில் தொடர்பு கொண்டாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் சொர்ணத்திற்கு உணவு வழங்குவது யார் அரசா இல்ல அவரது பெற்ற மகனா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் பெற்ற தாய்க்கு மகனே உணவு கொடுக்காத விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2 வது நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ ஆய்வு
மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

September 1, 2025
26 Views
எஸ்எஸ்விஎம் கல்வி குழுமம் நடத்திய உருமாறும் இந்தியா மாநாடு
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account