திருவட்டார், அக். 6 –
தமிழகத்தில் 2026 ல் தேர்தல் நடைபெற இருக்கிறது அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகின்றனர். அதிமுக சார்பில் சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் ஒவ்வொரு தொகுதியாக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு பகுதியாக சென்று தமிழக அரசின் மக்கள் விரோத பேக்கை கண்டித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார். அதன் பேரில் பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட வேர்கிளம்பி பகுதியில் பேரூர் செயலாளர் சபின் தலைமையில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் துண்டு பிரச்சாரம் பொதுமக்களிடம் கொடுத்து தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை பற்றி எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன், திருநெல்வேலி மாவட்ட மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சம்சுசுல்தான், திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயதாஸ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சக்கீர் உசேன், ஒன்றி செயலாளர்கள் ஷைன் ஜோஸ், புருஸ்லிகோபால், பொதுக்குழு உறுப்பினர் செந்தமிழ்வாசன், பத்மநாபபுரம் நகர செயலாளர் டேனியல், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மனோ, சிறுபாண்மை அணி செயலாளர் ரஞ்சித்குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி செயலாளர் ஷாஜின், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா பீட்டர், கருங்கல் பேரூர் செயலாளர் வினோத் டேனியல், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் விஜய் சந்திரன், பொருளாளர் நெல்சன், ஒன்றிய மாணவரணி செயலாளர் அஸ்வின், பிரமோத், வினு, அஜின், ரமேஷ், ஜோஸ், ஷாஜி, ஜெரோம் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



