தேவகோட்டை, செப். 23 –
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தலைமை அஞ்சலகம் சார்பில் சுற்றுப்புறச் சூழலை பேணிப் பாதுகாத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காரைக்குடி அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளர் ரித்திஷ் சவுகான், தேவகோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியானது அஞ்சல் அலுவலகத்திலிருந்து திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரையில் பேரணி நடைபெற்றது.
இதில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த பேரணியில் காரைக்குடி உபகோட்ட அஞ்சலக உதவியாளர் ரமேஷ், தேவகோட்டை அஞ்சலக உப கோட்ட நீல் ஓவர்சியர் உமா மகேஸ்வரி, அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



