ஈரோடு, செப். 19 –
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆத்ம நிர்மான் பாரத் (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் மாநில பயிலரங்கம் ஈரோடு செங்கோடம்பள்ளம் ஆலயமணி மஹாலில் நடைபெற்றது.
இதில் ராஜமுந்திரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஆந்திரப் பிரதேச மாநில பாஜக தலைவருமான டகுபதி புரந்தேஸ்வரி மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தொழில் பிரிவு தலைவர் பாலகிருஷ்ணன், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம். செந்தில் ஆகியோர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பயிலரங்கத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



