தென்காசி. ஜூன். 4
கடையநல்லூரில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா மணிக்கூண்டு அருகே நடைபெற்றது
கடையநல்லூரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு நகர அவைத் தலைவர் பெட்டி முருகையா தலைமை தாங்கினார் நகர நிர்வாகிகள் காசி, ராமச்சந்திரன், நெடுமாறன், தம்பு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், நகர மன்ற துணைத் தலைவர் ராசையா ,ஒன்றிய செயலாளர் சுரேஷ் ,யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் திணேஷ், ஆகியோர் முன்னிலை வைத்தனர் நகர இளைஞரணி பீரப்பா அனைவரையும் வரவேற்றார் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளருமான செல்லத்துரை மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட அவை தலைவருமான முத்துப்பாண்டி ஆகியோர் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு 101 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலைகள் 202 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை 101 விவசாயிகளுக்கு தென்னங்கன்று மற்றும் 101 லட்டுகள் வழங்கிக் கொண்டாடினார் இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் சிட்டிதிவான், ராமகிருஷ்ணன், மாலதி, பிரதிநிதி தனலட்சுமி, மற்றும் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் ,அப்துல்ஜப்பார், மாரிமுத்து, மாரி, சுகுமார், அப்துல் ரசாக், ரவி, சுடலைமுத்து, வீரபத்திரன், கண்ணன் ,மயில்சாமி, சையது மசூத் செந்தில் ராமையா ,பாலசுப்ரமணியன், அமானுல்லா, சாகுல் ஹமீது என்ற அப்துல் காதர் ,ஹபிபுல்லா முருகையா திரிகூடபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் செய்யது மீரான் ,இடைக்கால் குமார், மதி, தகவல் தொழில்நுட்ப அணி ஜாகிர் உசேன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாவட்ட செயலாளர் மா. செல்லத்துரை சிறப்பாக செய்திருந்தார்