புதுக்கடை, செப். 15 –
புதுக்கடை அடுத்த கீழ்குளம் பகுதி சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (62). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஏஞ்சல் மேரி (52) என்ற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். சம்பவ தினம் சுந்தர் ராஜ் ஏதோ விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கை அறையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரது மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது டாக்டர்கள் சுந்தர்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் இறந்த சுந்தர்ராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், தற்கொலை செய்து சாகப்போவதாக கூறி அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.


