சென்னை, செப். 08 –
தமிழ்நாடு பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் கல்வி கற்றபின் வேலைவாய்ப்பு பெரும் வகையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து தாயகம் திரும்பி உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ் மண்ணின் சுயமரியாதை சரித்திரத்தை உலகிற்கு உணர்த்தவும், மாபெரும் தமிழ்க் கனவோடு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு முதலீடுகளை கொண்டுவந்து தாய்த்தமிழ் நாட்டிற்கு திரும்பிய கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற புத்தகம் வழங்கி வரவேற்று ஆசி பெற்றார்.



