தஞ்சாவூர் ஜூன் 20
2553 டாக்டர்கள் விரைவில் நியமிக்க நடவடிக்கை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் கூறினார்.
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தூரில் அமைச்சர் மா சுப்பிரம ணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:
தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் அவசர தீவிர சிகிச்சை மையம் அமைப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த மையம் பல்வேறு காரணங்களால் அமைக்கப்படவில்லை .இதற்கான புதிய இடம் திருக்கானூர் பட்டியில் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான திட்ட பணி தயாரிக்கப்பட்டு ஓராண்டுக்குள் இந்த மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 45 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மைய கட்டிட பணி அடுத்த ஆண்டு 2025 டிசம்பர் மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் ரூபாய் 24 கோடி யில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் 5 மாத ங்களில் முடிக்கப்பட்ட திறக்கப்படு ம்.
தனியார் மருத்துவமனையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கைக் கருத்தரித்தல் மையம், இப்போது சென்னை அரசு மருத்து வமனையில் தொடங்கப்பட்டுள்ளது அடுத்து மதுரை காமராஜர் அரசு மருத்துவமனையில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது:
எழும்பூர் குழந்தைகள் நல மருத் துவ மையம் போன்று தஞ்சாவூரிலு ம் குழந்தைகள் மருத்துவ மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் .அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில் 984 பேர் 15 நாட்க ளில் நியமிக்கப்பட உள்ளனர்
மேலும் 2553 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கவும் நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில், 2 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு ரூபாய் 221.11 கோடி செலவிடப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 31 புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணி ரூபாய் 37 கோடி 85 லட்சம் செலவில் நடந்து வருகிறது என்றார்.
தஞ்சாவூர் அடுத்துள்ள ஒரத்தூர் ஊராட்சியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வைத்தனர் அமைச்சர் மா சுப்பிரமணியம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் அதேபோல் செருவா விடுதியில் ரூபாய் 50 லட்சத்தில் வட்டாரப் பொது சுகாதார மையம், கழனிக் கோட்டை ஊராட்சியில் 25 லட்சத்தி ல்துணை சுகாதார நிலையம், பள்ளி கொண்டான் ஊராட்சியில் ரூபாய் 30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார நிலைய கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 42 கோடி மதிப்பில் கட்டப் பட்டு வரும் ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சை மைய கட்டிடப்பணி களையும், ரூபாய் 20 கோடியில் 50 படுக்கை கொண்ட அதிதீவிர சிகிச் சை பிரிவு கட்டிட பணியையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
பின்னர் தஞ்சாவூர்அருகே உள்ள திருக்கானூர் பட்டியில் ரூபாய் 4 கோடியே 40 லட்சம் மதிப்பில் அவ சர காலதீவிர சிகிச்சை மையம் அமைக்கப்பட்ட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் உதவி கலெக்டர் (பயிற்சி ) உத்கர்ஷ் குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணபதி மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தஞ்சாவூர் மருத்து வ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா ,துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) கலைவாணி, ஒன்றிய குழு தலைவர் அரங்க நாதன் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.