முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய் கரும்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது இர்ஃபான், மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



