வேலூர் 05
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டரந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சொர்ண பைரவர் ஆலயத்தில் 8 ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவில் ஸ்ரீ சொர்ண பைரவருக்கு பால் அபிஷேகமும், பன்னீர் அபிஷேகம் ,பஞ்சாமிர்தம் அபிஷேகம், சொர்ண அபிஷேகமும் மகாதீபாரதனையும் ,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ஆலய ஸ்தாபகர் நந்தகோபால் சுவாமிகள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பெண்ணை ஆட்கொண்ட ஸ்ரீ ராமநாத ஈஸ்வரர் திருக்கோயில் கண்ணமங்கலம் ஓம் சிவ பிரம்ம ஸ்ரீ கைலாய சிவ சித்தர் அம்மையார் கும்பாபிஷேக நிறைவு விழாவில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார் உடன் லோக் பிரகாஷ் மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.