சுசீந்திரம், டிச. 5 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு மார்கழிப் பெரும் திருவிழா வருகின்ற 25ம் தேதி துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான கால்நாட்டும் விழா இன்று காலை தாணுமாலய சுவாமி கோவில் முன்பு நடைபெற்றது.
வரும் 25ஆம் தேதி காலை 8 மணி அளவில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகின்றது 3ஆம் திருவிழா அன்று மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5-ஆம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் 7ம் திருவிழா அன்று கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி அம்பாள் ரதவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் 9ஆம் திருவிழா அன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் விநாயகர் அம்பாள் ஆகிய சுவாமிகள் மூன்று தேரில் வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10ஆம் திருவிழா அன்று ஆராட்டு விழா நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலயா சுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



