அரியலூர்,டிச:06
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறையில் ஒன்றியத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தலின்படி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் “இந்தியாவின் இரும்பு பெண்மணி ” மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற சொல்லு ஏற்றார் போல் வாழ்ந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களின் 08 ஆண்டு நினைவு நாள் தினத்தை முன்னிட்டு செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுகவினர்
செந்துறை ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகிய திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.
இதில் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் , ஒன்றிய பொறுப்பாளர் குழுமூர் செல்வம் தலைமையில் , தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம்ரமேஷ் , அம்மா பேரவை மாவட்டசெயலாளர் பொன்பரப்பி செந்தில்குமார், பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் எஸ்.ஆர்.ஜமால் முகமது, இலைக்கடம்பூர் பழனிவேல், செந்துறை அருண் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.