மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி அருகே இல்ல விழாவிற்கு சென்ற தாய்மாமன் ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு – பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வானது
கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த பிரபுநாதன் என்பவரின் இல்ல விழா, மெய்யணம்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இல்ல விழாவிற்காக அன்னம் பாரி பட்டியிலிருந்து தாய்மாமனான வைரமுத்து என்பவரது தலைமையில் பட்டாசு வெடித்த வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் கருப்புக் கோவில் அருகில் ஊர்வலம் சென்ற போது எதிர்பாராத விதமாக பட்டாசு ஊர்வலத்திற்குள் புகுந்து வெடித்தில் ஊர்வலத்தில் வந்த இரு சிறுமிகள் உள்பட சத்யா, செல்வி, நித்யா, சானியா, பூங்கனி, திலகவதி, வைரசிலை உட்பட 8 பேர் படு காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார்
இல்ல விழா நடத்தியவர்கள் பட்டாசு வெடித்தவர்கள் என, 10 க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்து வந்து விபத்து தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.