பொதுமக்கள் தங்கள் அளித்த குற்றச்சாட்டுகள் மீது வெகு நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு மனு நாள் சுசீந்திரம் தனியார் மண்டபத்தில் வைத்து நேற்று நடைபெற்றது இந்த சிறப்பு மனுநாளில் வந்த மனுக்கள் கன்னியாகுமாரி காவல் நிலையம் 15 சுசிந்திரம் 14 அஞ்சுகிராமம் 15 ராஜாக்கமங்கலம் 15 ஈத்தாமொழி 5 மாவட்டத் துணை கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் 8 உட்பட 103 மனுக்கள் கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களிடம் நேரடி விசாரணையில் விசாரிக்கப்பட்டது அவருடன் கன்னியாகுமாரி ராஜாக்கமங்கலம் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்களும் உடன் விசாரணை மேற்கொண்டனர் இதில் 103 மனுக்களில் 77 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டது ஏற்கனவே கன்னியாகுமாரியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு மனுக்கள் முகாமில் 101 மனுக்கள் பெறப்பட்டு அதில் 80 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு நாட்களில் சுமார் 152 நிலுவையில் இருந்த மனுக்களை விசாரித்து தீர்வு ஏற்பட்டுள்ளது தீர்வு ஏற்பட்ட பொதுமக்களிடம் நிருபர்கள் கேட்கும்போது தங்கள் நீண்ட நாள் நிலுவையில் இருந்த மனுக்கள் மீது ஒரே நாளில் தீர்வு கண்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம் அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திய கன்னியாகுமாரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களுக்கும் விசாரணை மேற்கொண்டு 2 நாட்களில் 152 மனுக்களுக்கு தீர்வு கண்ட கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களுக்கும் மேலும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்களுக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவிக்கின்றோம் என்றனர்
சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு



