திருப்பத்தூர்:நவ:17,
திருப்பத்தூர் மாவட்டத்தில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப தலைமை தாங்கினார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் ஆ. பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் சு. இராமதாஸ் திட்ட விளக்க உரைகளை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் எ.வ வேலு கலந்துகொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 1063 பயனாளிகளுக்கு ரூ.9.32 கோடி அளவிற்கு கடன் உதவிகளை வழங்கியும், கூட்டுறவு வார விழா தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயங்களும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கேடயங்கள் பேருரை ஆற்றினார். இவ்விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் விவசாய கடன் 31 பயனாளிகள் மற்றும் குழுக்களுக்கு ரூபாய் 26. 97 லட்சமும், கால்நடை பராமரிப்பு 19 பைனாளிகளுக்கு 10 புள்ளி 18 லட்சம், மகளிர் சுய உதவி குழு கடன் 996 பயனாளிகள் விதம் 83 குழுக்களுக்கு 888. 24 லட்சமும், மாற்றுத் திறனாளிகள் கடன் 17 பயனாளிகளுக்கு 7.25 லட்சமும் மொத்தம் ரூ.9.32 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டது. சிறந்த கூட்டுறவு 24 நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கினர். மேலும் இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் N.K.R. சூரியகுமார், மாவட்ட பால்வளத்துறை தலைவர், நகர செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கந்திலி மதிய ஒன்றிய செயலாளர் K.A. குணசேகரன், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு நிறுவனங்களின் செயலாட்சியர்கள், கூட்டுறவாளர்கள், விவசாய பெருமக்கள், சங்கப் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.