திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் கோபால்பட்டி, அய்யாபட்டி,செடிப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற அய்யாபட்டியைச் சேர்ந்த ஜோதி பாசு (வயது 32),அழகர்(40), வெள்ளைச்சாமி(29), செடிப்பட்டியைச் சேர்ந்த (ராஜா 33), வடுகப்பட்டியைச் சேர்ந்த தனசேகரன்(43), மொட்டைய கவுண்டன் பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (28), கோபால்பட்டியைச் சேர்ந்த பீர் ஒலி(40) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள்,10 செல்போன்,ரூ59 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.