ஈரோடு நவ 21
ஈரோடு இடையன்காட்டுவலசு கீதா மருத்துவமனை-கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சிபள்ளி இணைந்து இடையன்காட்டு வலசு இந்து கல்வி நிலையத்தில் 58 பொருட்கள் இலவச திருமண சீர்வரிசைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கவிதாலயம் ராமலிங்கம் மேலாளர்கள் சார்நிஷா, மகாலட்சுமி,ரிதன்யா கார்த்திகா சர்மிளா தேவி ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் எளிய பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணமக்கள் மாதேஷ் கிருத்திகா, பிரகாஷ்ராஜ் கல்பனா, சபரிநாதன் சக்தி தர்ஷினி, ஆனந்த் மோகன தாமரை, பாலாஜி வினோதினி, ஆகியோருக்கு ரூ 25000 மதிப்புள்ள 58 இலவச திருமண சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. இதை ஈரோடு மாவட்ட காவல்துறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி சண்முகம் சீனியர் டாக்டர் . துரைராஜ் ஆகியோர் வழங்கினர்.
விழாவிற்கு சென்னை கெம் மேஜிக் பிரதீப் தலைமை தாங்கினார்.
மேலும் மாரீஸ் வேணுகோபல் ஸ்ரீராம் டிரேடர்ஸ் அரிமா பந்தா செல்வம் கோட்டை பிரியா புஷ்பநாதன்,பள்ளிபாளையம் ஆர்த்தோ டாக்டர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் கவிதாலயம் மகளிர் அணி தலைவி வெண்ணிலா நன்றி கூறினார் .