தஞ்சாவூர் பிப் 12.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் மக்கள் நேர்காணல் முகாம், மக்களுடன் முதல்வர் திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற அனைத்து முகாம்களிலும் இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டு வருகிறது.
ஏழை எளியோருக்கு எதிர்பாரா மல் ஏற்படுகிற மருத்துவ சிகிச்சை க்கான பெரும் தொகையை அரசே செலுத்து அவர்களின் துயர் துடை க்கும் திட்டம் தான் மருத்துவ காப்பீடு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்தவர்களி ன் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 225 ஆகும். அதில் காப்பீட்டு திட்ட அட்டை உபயோகித் து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 7 ஆயிரத்து 68 பேர் ஆகும். விண்ணப்பிக்க தேவையான குடும்ப அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் அட்டை ,ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கான வருமான சான்று ஆகியவற்றை பொது சேவை மையத்தில் ரூபாய் 60 செலுத்தி அனைவரும் விண்ணப்பித்து காப்பீடு அட்டை பெறலாம் .இவ்வாறு அவர் கூறினார்