திண்டுக்கல்லில் புரட்சி பாரதம் கட்சியின் 47-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றம் அன்னதானம்!
திண்டுக்கல்லில் புரட்சி பாரதம் கட்சி ஆண்டு விழா முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் புரட்சி பாரதம் கட்சியின் 47 வது ஆண்டு துவக்க விழா மற்றும் கட்சி கொடியேற்றுதல், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். திண்டுக்கல் தொகுதி இணைச் செயலாளர் வடிவேல், துணைச் செயலாளர் சகாயம் பிரிட்டோ முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர் சிவானந்தம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில முதன்மைச் செயலாளர் ருசேந்திரக்குமார் நகரின் முக்கிய பகுதிகளில் கட்சியின் கொடியேற்றினார் பின்னர் ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதில் மாநில செயலாளர் பரணி மாரி, மாநில துணைச் செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாநகர பொறுப்பாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.



