தஞ்சாவூர் ஆகஸ்ட் 29
மீன்கள் இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படு கிறது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவாய் மீன்கள், கடல் பாஸ்) மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிதாக கொடுவாய் மீன் குளங்கள் அமைக்க விரும்புவோர் பயன் பெறும் வகையில் புதிய மீன் குளங்கள் அமைக்கவும். அதற்கான உள்ளீட்டு செலவினங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் பொது பிரிவில் புது பிரிவினருக்கு 3 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் புதிய மீன் குளம் ஒரு எக்டேர் அளவில் அமைக்க செலவினம் ரூபாய் 8 லட்சம் எனவும் ,உள்ளிட்டு செலவீனம் ரூபாய் 6 லட்சம் எனவும் நிர்ணயித்து பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமாக ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட உள்ளது .மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாடுதிட்டம் 2021-22 ன் கீழ் உவர் நீர் இறால் வளர்ப்புக்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் பொது பிரிவினருக்கு 6 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் புதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவினத்திற் கான மொத்த செலவினும் ரூபாய் 14 லட்சத்தில்40 சதவீத மானியமாக ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் தஞ்சாவூர் கீழவாசல் அண்ணா சாலையில் உள்ள மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவிஇயக்குனர் அலுவலகத்தி ற்கு நேரிலோ அல்லது 04362 -235 389என்ற தொலைபேசி எண்ணி லோ தொடர்பு கொண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 25ஆம் தேதிக் குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது