திருப்பூர், ஜூன் 29:
போலீசார் ரயில் நிலையம் அருகே நேற்று மாநகர மதுவிலக்குஅம லாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தபால் அலுவலகம் முன்பாக சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ள சென்றனர். போலீசை கண்டதும் நபர் ஒருவர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவ ரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசா ரணை மேற்கொண்டனர். அதில் கேரள மாநி லம் கோழிக்கோடு பகுதியைச்
சேர்ந்த சபீர் பாஷா (23) பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அமீர் (38), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (48) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி கொண்டு ரயில் மூலமாக வந்து அவரவர் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்க ளது உடைமைகளை சோதனை செய்தபோது 7.600 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் மூவர் மீதும் வழக்குப்ப திந்து கைது செய்தனர்.
இதில் முருகேஸ்வரி மற்றும் அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.