துல்லியமான மூட்டு மாற்று சிகிச்சையில் புதிய மைல்கல்
சென்னை, செப்.11:
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், முழுமையான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு நோயாளியின் உடலமைப்பு மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொள்ளும் வகையில், ஸ்ட்ரைக்கரின் Mako SmartRobotics தொழில்நுட்பம், 3டி சி.டி. ஸ்கேன் இமேஜிங் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய விரிவான திட்டமிடல் ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளியின் உடலமைப்பு குறித்த விரிவான தகவல்களை மருத்துவர்கள் பெற முடிவதுடன், ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அறுவை சிகிச்சையை முன்கூட்டியே துல்லியமாகத் திட்டமிட முடிகிறது. இதனால் சிகிச்சை முறையை தனிப்பயனாக்குவதற்கும், அறுவை சிகிச்சையின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் ரோபோடிக் கை உதவினாலும், நோயாளிக்கான சிகிச்சை முடிவுகள் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து முக்கிய மருத்துவத் தீர்மானங்களும் தகுதி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
ரோபோடிக் உதவியுடனான மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் வளர்ச்சி மற்றும் மிகவும் துல்லியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையை வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர். 2,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்திருப்பது, ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எலும்பியல் சிகிச்சையில் மருத்துவமனை பெற்றுள்ள அனுபவத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.



