தஞ்சாவூர் ஜூன் 22
தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரி கள் நடத்திய சோதனையில் குடோ னில் பதுக்க வைக்கப்பட்டிருந்த 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குடோனின் உரிமையாளருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் மகேஸ்வ ரி தலைமையில் ,மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையில் துப்புரவு அலுவலர் கள் தங்கவேல் ,ரமேஷ் ,சீனிவாசன் ராமச்சந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பொன்னர், ஸ்டீபன் எபின் சுரேஷ் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத் தில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை மேற்கொண்ட னர். அப்போது அங்கிருந்த தனி யார் குடோனில் தடை செய்யப்பட்ட 2 டன் பாலிதீன் பைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதை பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் குடோனின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
வணிக நிறுவனங்கள் கடைகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும் .மேலும் கடை உரிமையாளர் கள் தங்கள் கடைக்கு முன்னால் குப்பை தொட்டி வைத்துக் கொள்ள வேண்டும் .பொதுமக்கள் பிளாஸ் டிக் பொருள்களைக் கொண்டு வருவதையும், பொது வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மற்றும் குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்ற ஒத்துழை ப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.



