வேலூர் 23
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த காட்பாடி ஸ்ரீ நாராயணா திருமண மண்டபத்தில் ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் சார்பில் 1ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் முதன்மை விருந்தினர்கள் வேலூர் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பயோ டெக்னாலஜி துறை டாக்டர்.ஏ.ராஜசேகர், காட்பாடி லட்சுமி மருத்துவமனை டாக்டர் எஸ். கிரண் கங்காதரன், குடியாத்தம் நவநீதம்மாள் டிரஸ்ட் தலைவர் ஆர். சிவானந்தம் ,குடியாத்தம் அப்போஸ்தலிக் சர்ச் பேராயர் எஸ். யோகானந்தம், கௌரவ விருந்தினர்கள் நவநீதம்மாள் சாரிடபிள் டிரஸ்ட் டிரஸ்டி எஸ் .நவநீதம், டிரஸ்டி மேலாளர் வித்யாவதி,வேலூர் மாவட்ட தீயணைப்பு வார்டன் லயன் எஸ். ரமேஷ் குமார் ஜெயின் ,ஸ்ரீ நாராயணி கல்யாண மண்டபம் தங்கவேல் , ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து வாழ்த்துரை வழங்கினர்.. நிகழ்ச்சியை நிறைவாக ஜாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அலைட் ஹெல்த் சயின்ஸ் தாளாளர் எஸ்.பென்னிஹின், நன்றி உரையாற்றினார்