சுசீந்திரம், ஆக. 19 –
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, வாரியூர் சைவ வெள்ளாளர் வெளி நின்ற விநாயகர் டிரஸ்ட், வாரியூர் மணிகண்டன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் கழகச் செயலாளர் ராஜபாண்டி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் முருகன் ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
இதனடிப்படையில் இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2025-2026-ம் ஆண்டில் தமிழ் நாட்டில் 20 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தரம் உயர்த்திய அரசுக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தளவாய் சுந்தரம் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வாரியூர் பள்ளி தலைமையாசிரியை பகவதியம்மாள், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் கழகச் செயலாளர் ராஜபாண்டி, கவுன்சிலர் ராமச்சந்திரன், வாரியூர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



