நவ. 8
திருப்பூர் மாவட்டம் எல். ஆர். ஜி.அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கூடுதலாக 28 வகுப்பறைகள் 12 ஆய்வகங்கள் பல்நோக்கு திறந்தவெளி அரங்கம் காங்கிரட் சாலை அமைத்தல் விளையாட்டு மைதானம் மற்றும் தண்ணீர் வசதிகளை மேம்படுத்தும் பணிக்காக 19.10கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க. செல்வராஜ் துவக்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன் மகளிர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் நந்தினி, பகுதி செயலாளர்
மு .க.உசேன், மியாமி ஐயப்பன்,
வார்டு செயலாளர் நந்தகோபால், மாவட்ட
தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சூர்யா,
மற்றும் கட்சி நிர்வாகிகள்
கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.